பழ ஓவியம்

வாழைப் பழத்தை வைத்து, இப்படி ஒரு தொழிலை இதுவரை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.

Update: 2016-12-29 20:30 GMT
வாழைப் பழத்தை வைத்து, இப்படி ஒரு தொழிலை இதுவரை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். டெக்சாசில் வசிக்கும் டேவோன்ட் வில்சன், வாழைப் பழங்களின் மீது படம் வரைந்து, மீசை, தாடி ஒட்டி நிஜ பொம்மை களாக மாற்றிவிடுகிறார். இப்படி அலங்கரிக்கப்பட்ட ஒரு வாழைப் பழத்தின் விலை 650 ரூபாயாம்.

நான் மருத்துவமனையில் வேலை செய்தவன். அங்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன். ஒருமுறை வாழைப் பழத்தின் மீது வரைந்தபோது அனைவரும் பாராட்டினார்கள். வாழைப்பழ தோல்களை செதுக்கி, ஓவியமாக வரைந்து விற்பது நல்ல தொழிலாக தோன்ற, உடனே களத்தில் இறங்கிவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய திறமையை பார்த்து சிரித்தவர்கள், இன்று ஆன்லைனில் கிடைக்கும் ஆர்டர்களை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஆம்! ஒரு நாளைக்கு 200 வாழைப் பழ ஓவியங்கள் ஆர்டராக கிடைக்கிறது. 4 ரூபாய் வாழைப்பழம், என்னுடைய ஓவியத்தால் 650 ரூபாய்க்கு விலைபோகிறது என்றால், லாபத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். தற்போது கண்டம் தாண்டியும் சில ஆர்டர்கள் வருவதால், இந்த ஓவியங்களை பதப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளேன் என்கிறார் வில்சன்.

மேலும் செய்திகள்