விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வார்தா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட்ட

Update: 2016-12-29 00:04 GMT
திருவள்ளுர்,

திருவள்ளூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வார்தா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வராஜ், டில்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அனீப், மாவட்ட செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட பொருளாளர் சம்பத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பின்னர் முக்கிய நிர்வாகிகன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்