ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர் அருகே, மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மின் ஊழியர் முருகன் (வயது 48) என்பவர் கடந்த 23–ந் தேதி, மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்ததே காரணம் என்று ம

Update: 2016-12-28 23:43 GMT

வண்டலூர்,

மறைமலைநகர் அருகே, மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மின் ஊழியர் முருகன் (வயது 48) என்பவர் கடந்த 23–ந் தேதி, மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்ததே காரணம் என்று மின் ஊழியர்கள், மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை அது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மின்வாரிய ஊழியர் ஒருவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், செங்கல்பட்டு வட்டத்தை சேர்ந்த மின் ஊழியர்கள் மறைமலைநகர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 30–க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்று மின் வாரியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்