கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் பேச்சு

கரூர், கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் “முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம்” தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர்

Update: 2016-12-28 22:48 GMT
கரூர்,

கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் “முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம்” தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கிபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை மூலம், பள்ளிக் குழந்தைகளுக்கு கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து அறிய செய்வதுடன் சுகாதார உறுதிமொழியும் எடுக்க வேண்டும். கழிப்பறை சென்று மலம் கழித்தபின் கைகளை சோப்பினால் சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிக்குழந்தைகள் நகங்களை வெட்டி, காலணி அணிந்து, தூய்மையான உடையில் பள்ளிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க கழிப்பறையை பயன்படுத்த பழக்கப்படுத்த வேண்டும். சிறுவயதிலேயே உருவாக்கப்படும் இப்பழக்கம், குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வரும் நோயாளிகள் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பின் அவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் கழிப்பறையின் அவசியத்தை உணர்த்தி கழிப்பறை கட்ட ஆலோசனை வழங்க வேண்டும். அம்மா திட்ட முகாம்கள், மனுநீதி நாள் முகாம்களில் கழிப்பறையின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூரியபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோமகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்