கள்ளக்காதல் பிரச்சினையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில்

ஈரோடு, கள்ளக்காதல் பிரச்சினையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கள்ளக்காதல் ஈரோடு மாவட்டம் தாளவாடி பனஹள்ளி வாழைபள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர் சாமி என்கிற சிவக்

Update: 2016-12-28 23:15 GMT
ஈரோடு,

கள்ளக்காதல் பிரச்சினையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கள்ளக்காதல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பனஹள்ளி வாழைபள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர் சாமி என்கிற சிவக்குமார் (வயது 32). விவசாயி. இவருக்கும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் உடிகளா தம்பள்ளிவீதியை சேர்ந்த மரப்பா-சுவர்ணம்மா தம்பதியின் மகள் பாக்கியாவுக்கும் (30) திருமணம் நடந்தது.

பின்னர் சிவக்குமாரும், பாக்கியாவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரசவத்திற்காக பாக்கியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜேஸ்வரி என்று பெயர் சூட்டினர். இதற்கிடையே சிவக்குமாருக்கும், தாளவாடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்னர் கடந்த 15-10-2014 அன்று பாக்கியா தனது குழந்தையுடன் சிவக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது சிவக்குமார் தனது மனைவி பாக்கியாவிடம், ‘உன்னுடன் வாழ்க்கை நடத்த முடியாது’ என்று கூறினார். இதையடுத்து பாக்கியாவின் பெற்றோர் சிவக்குமாருக்கு அறிவுரை வழங்கி அவர் களுடைய மகளை தாளவாடியில் விட்டுச்சென்றனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்தநிலையில் 16-10-2014 அன்று அதிகாலை பாக்கியா வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிவக்குமாரை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், பாக்கியாவை தற்கொலைக்கு தூண்டிய சிவக்குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது இந்த வழக்கில் போலீஸ் தரப் பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர். சுமதி ஆஜரானார்.

மேலும் செய்திகள்