வாய்மேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வாய்மேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை, பணம் திருட்டு நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது39). கூலித்தொழிலாளி. இவர் ந

Update: 2016-12-28 17:44 GMT

வாய்மேடு,

வாய்மேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது39). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் சூட்கேஸ் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மகாலிங்கத்தின் வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோ உடைத்துள்ளனர். அதில் பணம், நகைகள் இல்லாததால், அருகே இருந்த சூட்கேசை உடைத்து, அதில் இருந்த பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும், நாகையில் இருந்து கொண்டு வரப்பட்ட மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்