வெண்ணந்தூரில் புதிய வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே கார்டுகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

வெண்ணந்தூர் பேரூராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் புதிய வங்கி கணக்கு தொடங்குதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்கிய நபர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்குதல் மற்றும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை குறித்

Update: 2016-12-28 23:00 GMT

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் பேரூராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் புதிய வங்கி கணக்கு தொடங்குதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்கிய நபர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்குதல் மற்றும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, புதிதாக வங்கி கணக்குகளை தொடங்கிய 11 நபர்களுக்கு ரூபே கார்டுகளையும், தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் 3 நபர்களுக்கு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கி பேசியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை வங்கி கணக்கு இல்லாதோருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல், ஜன்தன் திட்ட வங்கி கணக்குதாரர்களுக்கு ரூபே கார்டு அட்டை வழங்குதல் ஆகிய பணிகளை 100 சதவீதம் முடிக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு வங்கி கணக்கு அவசியம் என்பதால், அனைவரும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இனி வரும் காலங்களில் மக்கள் நேரடி பண பரிமாற்றத்தினை தவிர்த்து வங்கி பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் வங்கி கணக்கினை தொடங்கியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் வங்கி கணக்கை தொடங்குவதற்காக இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு இதுவரை வங்கி கணக்கு தொடங்காதவர்கள் உடனடியாக புதிய வங்கிக்கணக்கினை தொடங்கி கொள்ளவதோடு, மக்கள் நேரடி பண பரிமாற்றத்தினை தவிர்த்து வங்கி பண பரிமாற்றம் மேற்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

நிகழ்ச்சியில் சேலம் இந்திய வங்கியின் பொதுமேலாளர் கோபிகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) சந்திரசேகரன், தொழிலாளர் நல அலுவலர் மஞ்சள்நாதன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்