பெத்தநாயக்கன்பாளையத்தில் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை

சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு பெத்தநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து 30 வயதுடைய வாலிபர் ஒருவர் த

Update: 2016-12-28 17:24 GMT

சூரமங்கலம்,

சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு பெத்தநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து 30 வயதுடைய வாலிபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்