ராமமோகனராவ் எதிர் விளைவுகளை சந்திப்பார் ஊழல் செய்தவர்களை தப்பிக்கவிடக்கூடாது தஞ்சையில் வைகோ பேட்டி

ராமமோகனராவ் எதிர் விளைவுகளை சந்திப்பார். ஊழல் செய்தவர்களை தப்பிக்க விடக்கூடாது என்று தஞ்சையில் வைகோ கூறினார். பேட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ராமமோகன ராவ் தன் அதிகார வரம்

Update: 2016-12-28 23:00 GMT

தஞ்சாவூர்,

ராமமோகனராவ் எதிர் விளைவுகளை சந்திப்பார். ஊழல் செய்தவர்களை தப்பிக்க விடக்கூடாது என்று தஞ்சையில் வைகோ கூறினார்.

பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ராமமோகன ராவ் தன் அதிகார வரம்பை மீறி பேசியிருக்கிறார். இந்தியாவிலேயே எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதுபோல் பேசியது கிடையாது. நான் மக்கள் மன்றத்துக்கு போவேன். நீதிமன்றத்துக்கு போகமாட்டேன். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? என்று தவறாக பேசியிருக்கிறார். அவர் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்திற்கு போகட்டும். ஆதாரங்கள் இருந்ததால் தான் விசாரணை நடத்தி இருக்கிறோம் என்று திட்டவட்டமாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இதற்கு பின்னரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் வெடித்து சிதறுவது போன்று இவர் இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கான எதிர் விளைவுகளை அவர் சந்திப்பார். மத்தியஅரசின் வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஒரு மாநிலஅரசின் அனுமதி தேவையில்லை. சி.பி.ஐ.க்கு மாநிலஅரசின் அனுமதி இல்லாமல் வர முடியாது. என்றாலும் கூட இம்மாதிரியான நடவடிக்கை எடுக்கும்போது மாநிலஅரசுக்கு தெரிவித்துவிட்டு, ஒரு வேளை தங்களுக்கு சரியான பாதுகாப்பு கிடைக்காது என கருதும் பட்சத்தில் மத்தியஅரசின் காவல்படையை பெற்று கொள்ள இடம் இருக்கிறது.

தப்பிக்கவிடக்கூடாது

ஆனால் மாநிலஅரசுக்கு தெரிவித்துவிட்டு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது. அது தெரிவிக்கப்பட்டதா? இல்லையா? எந்தவிதத்தில் செயல்பட்டனர் என்பது முழுமையாக உண்மைகள் வெளியே வந்த பிறகு தான் சொல்ல முடியும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்கவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்