காட்பாடி அருகே அடுத்தடுத்து நடந்த சம்பவத்தில் ரெயில் மோதி பெண் உள்பட 3 பேர் பலி

காட்பாடி அருகே அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– ரெயில்மோதி பெண் பலி காட்பாடி பிரம்மபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகில் ரெயில்மோதி பெண் ஒருவர் நேற்று இறந்துகி

Update: 2016-12-28 22:30 GMT

காட்பாடி,

காட்பாடி அருகே அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் ரெயில் மோதி பலியானார்கள்.

இந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ரெயில்மோதி பெண் பலி

காட்பாடி பிரம்மபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகில் ரெயில்மோதி பெண் ஒருவர் நேற்று இறந்துகிடந்தார். இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி தமிழரசி என்றும், காலையில் கணவருக்கு உணவு எடுத்து சென்றபோது ரெயில்மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் சாவு

காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (66) கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் பிரம்மபுரம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்தவழியாக சென்ற ரெயில்மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன் (44). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் திருவலம்– சேவூர் இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வந்த ரெயில்மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்