கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அய்யப்பசுவாமிக்கு மண்டல பூஜை

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்புள்ள மகாமண்டபத்தில் அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக மாலை திருஞானசம்பந்தர் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பாடலீஸ்வரர் கோவில் மகா மண்டபத்தை சென்றடை

Update: 2016-12-28 22:30 GMT

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்புள்ள மகாமண்டபத்தில் அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக மாலை திருஞானசம்பந்தர் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பாடலீஸ்வரர் கோவில் மகா மண்டபத்தை சென்றடைந்தனர். பின்னர் படிபூஜையும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் கடலூர் பஸ்நிலையத்தின் நுழைவு பாதையில் உள்ள நாகம்மன் கோவிலில் அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நாகம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணியளவில் கோர்ட்டு சாமி என்கிற வெங்கடாஜலம்சாமி குருசாமி தலைமையில் அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜையும், அபிஷேக ஆராதனையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப சாமிகள் எம்.ஜி.ஆர்.என்கிற ராமச்சந்திரன், சவுந்தர்ராஜ், உதயன், பாண்டு, சக்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்