ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக தம்பதி மீது தாக்குதல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி புதுப்பேட்டை அருகே பரபரப்பு
புதுப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக தம்பதி தாக்கப்பட்டனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் புதுப்பே
நெல்லிக்குப்பம்,
புதுப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக தம்பதி தாக்கப்பட்டனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம்புதுப்பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் சிறுகிராமத்தை சேர்ந்தவர் முனியன்(வயது 55). இவர் அதே கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியிருந்தார். இதனை பண்ருட்டி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் அகற்றினர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி உஷா(35) என்பவர்தான் காரணம் என நினைத்து, முனியன் குடும்பத்தினர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் உஷாவையும், சிவக்குமாரையும் அவர்கள் தாக்கினர்.
இது குறித்து உஷா, புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த உஷா, தனது வீட்டின் முன்பு உள்ள தெருவில் நின்று கொண்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார். பின்னர், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியபடி தீ வைக்க முயன்றார்.
ஒருவர் கைதுஇதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியனின் மகன் சிவக்குமார்(33) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள முனியன், இவருடைய மனைவி வீரம்மாள், சிவக்குமார் மனைவி சிவரஞ்சனி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.