கண்ணமங்கலத்தில் ஆஞ்சநேயர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக ஆஞ்சநேயர், வரசித்தி விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக பூஜைகள் நடந
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக ஆஞ்சநேயர், வரசித்தி விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக பூஜைகள் நடந்தன.
நேற்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, 2–ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து அலங்காரம் நடந்தது. காலை 9.30 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பக்தி சொற்பொழிவு நடந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.