பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி அருகே உள்ள தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மருதன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலகி
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே உள்ள தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மருதன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர் ஷேசன் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளப்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழப்பை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கும் தெத்துப்பட்டி ஊராட்சி இந்திராநகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயான வசதி அமைத்து தர வேண்டும். தெத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து ஊர்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். இந்திராநகர் பகுதியில் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.