ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் முப்பெரும்விழா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முப்பெரும் விழா பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 131 –ம் ஆண்டு தொடக்கவிழாக்கூ

Update: 2016-12-27 22:30 GMT

பெரம்பலூர்,

வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் முப்பெரும்விழா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முப்பெரும் விழா

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 131 –ம் ஆண்டு தொடக்கவிழாக்கூட்டம், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா மற்றும் சோனியாகாந்தி 70–வது பிறந்ததினவிழா ஆகிய முப்பெரும் விழா நேற்று மாலை மதரசா சாலையில் உள்ள தனியார் கூட்டஅரங்கில் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் தேனூர்கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிவாஜி மூக்கன் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சின்னசாமி, விவசாய பிரிவு சித்தர், பாராளுமன்ற தொகுதி தலைவர் ரத்தீஷ், வட்டாரத்தலைவர்கள் ரெங்கராஜ், அருணாசலம், செங்கமலை ஆகியோர் பேசினார்கள்.

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்

உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடச்செய்வது.

2019–ல் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி எம்.பி.யை

முன்னிறுத்தி அதற்கான தேர்தல் இயக்கத்தை மேற்கொள்வது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதாலும், காவிரியில் நீரின்றி வறண்டுவிட்டதாலும், பெரம்பலூர் உள்பட அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்கவேண்டும்.

கண்டனம்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால், பல கோடிக்கணக்கான ஏழை–எளிய மக்கள் வங்கிகளில் பணம் எடுக்கமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம்தெரிவித்துக்கொள்கிறது.

மதசார்பின்மையை கொண்ட பன்மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால், இந்தியாவில் பொதுசிவில் சட்டம் இயற்ற உத்தேசித்து வருவதை மத்திய அரசு கைவிடவேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் காங்கிரஸ் மனிதஉரிமை பிரிவு மாவட்ட தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்