மதுரை கூலித்தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் தேனி கோர்ட்டில் சரண்

மதுரையில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– கூலித்தொழிலாளி கொலை மதுரை கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி (வயது 32). இவர் டை

Update: 2016-12-27 22:30 GMT

தேனி,

மதுரையில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

கூலித்தொழிலாளி கொலை

மதுரை கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி (வயது 32). இவர் டைல்ஸ் கற்கள் பதிக்கும் கூலித்தொழில் செய்து வந்தார். கடந்த 22–ந்தேதி கோரிப்பாளையத்தில் இவர் பலத்த காயம் அடைந்து கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மர்ம நபர்கள் அவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 24–ந்தேதி சின்னப்பாண்டி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (23), ஜம்புரோபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்த சந்திரன் மகன் பாண்டியராஜன் (23) ஆகியோர் சின்னப்பாண்டியை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்து. இதில் பாண்டியராஜன் போலீசில் சிக்கினார்.

வாலிபர் சரண்

ராஜேசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜேஷ் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுந்தரி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்