தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் 3 சக்கர சைக்கிள்கள் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சியில், கடந்த 2013–14–ம் நிதியாண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், அப்போதைய எம்.எல்.ஏ சி.த.செல்லப்பாண்டியன் நிதியில் இருந்து சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குப்பை சேகரிக்கும் 3 சக்கர சைக்கிள்கள் வாங்கப்பட்டன. இந்த 3 சக்கர சைக்கிள்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
தூத்துக்குடி,

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு ரூ.4 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 25 மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினீயர் லட்சுமணன், உதவி ஆணையர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேசன், ஸ்டான்லி பாக்கியநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.