கொங்கணாபுரம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

கொங்கணாபுரம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. அரசு பஸ் கண்டக்டர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவ

Update: 2016-12-27 23:00 GMT

இடைப்பாடி,

கொங்கணாபுரம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

அரசு பஸ் கண்டக்டர்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சுமங்கலி. இவர் அரியானூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை சுமங்கலி வழக்கம்போல வீட்டில் சமையல் செய்தார். பின்னர் அவரும், மணியும் சாப்பிட்டனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்கள்.

தீப்பிடித்து எரிந்தது

பகல் 11 மணியளவில் மணியின் ஓட்டு வீட்டில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி இடைப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த கட்டில், துணிமணிகள், மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. உடனே, தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்கள் தீயை அணைத்தனர். இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தார்கள். இதுகுறித்து இடைப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்