தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முற்றுகை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு விவசாயிகள்
தூத்துக்குடி
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகைதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருகிய பயிர்களுடன் வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கோவில்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, மாவட்ட தலைவர் ராமையா, விளாத்திகுளம் மாரிச்சாமி, திருச்செந்தூர் ராஜா, ஓட்டப்பிடாரம் செல்வம், ஸ்ரீவைகுண்டம் அம்பிகாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கைதமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரண பணியை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், பயிர் பாதிப்பு அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும், விவசாய பாதிப்பால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவற்றை பழுது பார்த்து தூர்வார வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர்கள் லெனின், கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் தூத்துக்குடி தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 250–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.