மண்டல பூஜையையொட்டி நெல்லை பொதிகை நகர் அய்யப்ப சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம்

நெல்லை பொதிகை நகர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது. மண்டல பூஜை நெல்லை புதிய பஸ் நிலையம் என்.ஜி.ஓ. காலனி அருகில் உள்ள பொதிகை நகரில் அமைந்து உள்ள அய்யப்பன் கோவிலில் 19–ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் கோடி

Update: 2016-12-26 23:15 GMT

நெல்லை

நெல்லை பொதிகை நகர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது.

மண்டல பூஜை

நெல்லை புதிய பஸ் நிலையம் என்.ஜி.ஓ. காலனி அருகில் உள்ள பொதிகை நகரில் அமைந்து உள்ள அய்யப்பன் கோவிலில் 19–ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் கோடி அர்ச்சனை விழா கடந்த 20–ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

இரண்டாவது நாள் 1008 சங்காபிஷேகம், களபாபிஷேகம் ஆகியவையும், அன்று இரவு அய்யப்ப கான இசை நிகழ்ச்சியும் நடந்தது. மூன்றாவது நாள் காலை அய்யப்ப சுவாமிக்கு கோடி அர்ச்சனையும், அன்று மாலை திருவிளக்கு பூஜையும், திருப்படி பூஜையும் நடந்தது.

18 வகையான அபிஷேகம்

நான்காவது நாளான நேற்று காலை கணபதி ஹோமம், 108 கலச பூஜை, கஜ பூஜை மற்றும் கோ பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பால் குடம், நெய் குடம், புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் அய்யப்ப சுவாமிக்கு 108 கலச அபிஷேகம், 108 படி நெய், 508 இளநீர் உள்பட 18 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அய்யப்ப பஜனை நிகழ்ச்சி நடந்தது.

அதன் பின்னர் நண்பகல் மகேஸ்வர பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த பூஜைக்கு பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீதியுலா

மாலையில் யானை, குதிரையுடன் செண்டை மேளம் முழங்க வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் அய்யப்ப உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது. இரவு அய்யப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. அதனைத்தொடர்ந்து அய்யப்ப பஜனையும், தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பொதிகை நகர் அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.


மேலும் செய்திகள்