வெள்ளியணையில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

வெள்ளியணையில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கபடி போட்டி கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு தெரு இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி வெள்ளியணை தொடக்கப்பள்ளி மைதானத்தில் கடந்த 24–ந் தேதி தொடங

Update: 2016-12-26 22:22 GMT

வெள்ளியணையில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கபடி போட்டி

கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு தெரு இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி வெள்ளியணை தொடக்கப்பள்ளி மைதானத்தில் கடந்த 24–ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 54 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

பரிசு

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், செட்டியூர் மகுடீஸ்வரன் கபடிக்குழு முதலிடத்தை பிடித்து முதல் பரிசான ரூ.7 ஆயிரத்தையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும் பெற்றது. கரூர் மணவாசி கலைப்புலி கபடிக்குழு 2–வது பரிசான ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையை பெற்றது. திண்டுக்கல் வளர்பிறை கபடிக்குழு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையையும், கரூர் மாவட்டம், வரகூர் புவனேஸ் கபடிக்குழு 4–வது பரிசான ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.ஆயிரம் மதிப்புள்ள கோப்பையையும் பெற்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. 2 நாட்கள் நடைபெற்ற கபடி போட்டிகளை வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


மேலும் செய்திகள்