திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா பணப்பலன்களை வழங்க கோரி நடத்தினர்

பணப்பலன்களை வழங்க கோரி திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் திருச்சி பெரியமிளகுபாறையில் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டல அலுவலகம்

Update: 2016-12-26 23:30 GMT
திருச்சி,

பணப்பலன்களை வழங்க கோரி திருச்சி மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

திருச்சி பெரியமிளகுபாறையில் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சிலர் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மருதமுத்து தலைமையில் நேற்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

மண்டல மேலாளர் மணியை சந்தித்து தங்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, அகவிலைப்படி உயர்வு பாக்கி உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும், கடந்த 2012–ம் ஆண்டு முதல் அவை வழங்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரி மண்டல அலுவலகத்தின் வளாகத்தில், தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சென்னையில் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதாகவும், ஓய்வூதியர்களுக்கு உரிய பணப்பலன்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின் நேற்று மதியத்திற்கு மேல் அனைவரும் கலைந்து சென்றனர். போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் இந்த திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

--–

படம் உண்டு

மேலும் செய்திகள்