புதுச்சேரியில் 12ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு கடலில் பால் ஊற்றி, மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலை அழிவை ஏற்படுத்தி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக சென்று, கடலில் பால் ஊற்றியும் மற்றும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு,
புதுச்சேரி
சுனாமி ஆழிப்பேரலை அழிவை ஏற்படுத்தி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக சென்று, கடலில் பால் ஊற்றியும் மற்றும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி, இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, சுனாமி என்னும் ஆழிப்பேரலையாக உருவெடுத்து லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
ஆண்டு தோறும் அஞ்சலி
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் கடலோரத்தில் வசித்த மீனவ மக்கள் மற்றும் கடற்கரைக்கு காற்று வாங்குவதற்காகவும், கடல் அலையை வேடிக்கை பார்க்கவும் வந்த மக்கள் என பல ஆயிரக்கணக்கான மக்களை கடல் தாய் அப்படியே விழுங்கிச் சென்றாள். இந்த நிகழ்வு நடந்து 12 ஆண்டுகள் ஆனாலும், அந்த நிகழ்வுகளால் மக்களின் மனதில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை.
இந்த சுனாமியால் பாதிப்படைந்த மக்கள், சுனாமி தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கடற்கரைகளில் ஒன்று கூடி சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.