பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் பிரதமர் நரேந்திரமோடி தனியார் நிறுவனத்திடம் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதைக்கண்டித்தும், அவர் பதவி விலகக்கோரியும் நேற்று

Update: 2016-12-26 22:00 GMT

புதுச்சேரி,

பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தனியார் நிறுவனத்திடம் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதைக்கண்டித்தும், அவர் பதவி விலகக்கோரியும் நேற்று இளைஞர் காங்கிரசார் போராட்டங்களை நடத்தினார்கள்.

புதுவையில் காமராஜர் சிலையருகே இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

கேரள எம்.எல்.ஏ.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கேரள மாநில எம்.எல்.ஏ. ஷாபி பரம்பில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி பதவி விலகக்கோரி இளைஞர் காங்கிரசார் கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர்கள் வினாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், நிர்வாகிகள் சிவசண்முகம், எஸ்.எம்.ஏ. கருணாநிதி, செந்தில்குமரன், கோபி என்ற கோபாலமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிர்வாகி மயக்கம்

ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் துணைத்தலைவரான வினாயகமூர்த்திக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை காங்கிரசார் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வினாயகமூர்த்தியை முதல்–அமைச்சர் நாராயணசாமி சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்