6 மாதங்களாக சம்பளம் வழங்காததால் வங்கியை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
சத்திரப்பட்டி பகுதியில், 6 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளம் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி, வேலூர்–அன்னப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, தா.புதுக்கோட்டை, ரெட்டியபட
சத்திரப்பட்டி
சத்திரப்பட்டி பகுதியில், 6 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம்திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி, வேலூர்–அன்னப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, தா.புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, பெரியகோட்டை, அரசப்பபள்ளபட்டி ஆகிய 8 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு விருப்பாட்சியில் உள்ள ஒரு வங்கி மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த வங்கியில் தான் அவர்களுக்கு பணம் வரவு வைக்கப்படும். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகைதொழிலாளர்கள் வங்கிக்கு சென்று கேட்டால் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக தெரிகிறது. சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் தேவராஜ் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் அருள்செல்வன் உள்பட நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரிமுத்து, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களின் வங்கி கணக்கில் உடனடியாக 50 சதவீத பணத்தை செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகையை 20 நாட்களுக்கு பின்பு வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.