பெரியகுளத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மண்டல தலைவர் ரமணி தலைமை தாங்கினார். இதில் தொடக்க வேள
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மேற்கு மண்டல தலைவர் ரமணி தலைமை தாங்கினார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்கநகைகள் ஏலம் விட்டதில், தங்கநகை விலை ஏற்ற இறக்கத்தின் காரணமாக ஏற்பட்ட குறைவுபடி தொகைக்காக சங்கப்பணியாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச்செயலாளர் காமராஜ்பாண்டியன், மேற்கு மண்டல செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.