தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி சாவு திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம்
திருவாரூர்,
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவை மூடி தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சேரன், விவசாயிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பெண்கள் ஒப்பாரி
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம், உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், மாவட்ட தலைவர் வீராசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை மீறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். இதனையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக பிராதன வாசல் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
மயங்கி விழுந்து விவசாயி சாவு
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூரை சேர்ந்த விவசாயியான மகாலிங்கம் (வயது 45) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மகாலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி கூறுகையில், போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி மகாலிங்கம் உயிரிழந்தது வேதனை அளிக்கின்றது. எனவே விவசாயிகள் உயிரிழப்பை தடுத்திடும் வகையில், அவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினார். இறந்த விவசாயி மகாலிங்கத்திற்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், பாக்கியலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.