டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது; 15 பவுன் நகைகள் மீட்பு

ஆட்டையாம்பட்டி பகுதியில் நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடத்தூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லூர் டாஸ்மாக் ஊழியர் குமா

Update: 2016-12-26 22:30 GMT

ஆட்டையாம்பட்டி,

ஆட்டையாம்பட்டி பகுதியில் நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடத்தூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லூர் டாஸ்மாக் ஊழியர் குமார் கொலை வழக்கில் கடந்த 2¾ ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பாஸ்கரன், அய்யனார்சாமி, பிரபு ஆகிய 3 பேர் போலீசில் சிக்கினர். மேலும் இவர்கள் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரன், அய்யனார்சாமி, பிரபு ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் பெரிய ஆண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார்(வயது26), ஆட்டையாம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்த ராஜா(26) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இவர்கள் 2 பேர் மீதும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்