தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தவர்களை அலைக்கழிக்க கூடாது கலெக்டரிடம் கோரிக்கை
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானத்திடம் வெள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் கேட்டு மனுக்க
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானத்திடம் வெள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் கேட்டு மனுக்கள் கொடுத்தால் வருவாய் ஆய்வாளர்கள் அதனை உடனடியாக ஆய்வு செய்து கையொப்பமிட்டு கொடுப்பது இல்லை. இதனால் மனுக்கள் கொடுத்தோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கொடுக்கப்படும் மனுக்கள் மீது மனுதாரர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.