திருத்தணி முருகன் கோவில் படி பஜனை திருவிழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருத்தணி முருகன் கோவில் படி பஜனை திருவிழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. ஆலோசனை கூட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 31–ந்தேதி படி பஜனை திருவிழாவும், ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள

Update: 2016-12-25 22:15 GMT

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் படி பஜனை திருவிழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 31–ந்தேதி படி பஜனை திருவிழாவும், ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள 365 படிகளிலும் தேங்காய்கள் உடைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர் படிக்கட்டுகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலக்கு சென்று முருகபெருமானை தரிசனம் செய்வார்கள். விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசித்து செல்வார்கள்.

விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடந்தது.

சிறப்பு பஸ் வசதி

கோவில் இணை ஆணையர் சிவாஜி வரவேற்றார். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், திருத்தணி ஆர்.டி.ஓ. விமல்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், தாசில்தார் பரணீதரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விழா தொடர்பான கருத்துகளை கூறினார்கள்.

விழாவில் பக்தர்கள் முருக பெருமானை சிரமமின்றி தரிசித்து செல்லும் வகையில் சிறப்பு வழிகள் ஏற்பாடு செய்யவேண்டும். பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி மற்றும் சுகாதார வசதிகளை செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்