திருவாரூரில் ஊர்க்காவல் படைவீரர்கள் தின விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பங்கேற்பு

திருவாரூர், திருவாரூரில் ஊர்க் காவல் படைவீரர்கள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டார். ஊர்க்காவல் படை தின விழா

Update: 2016-12-25 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் ஊர்க் காவல் படைவீரர்கள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டார்.

ஊர்க்காவல் படை தின விழா

தமிழக போலீஸ் துறையில் ஒரு பகுதியாக ஊர்க்காவல் படை இயங்கி வருகிறது. போலீசாருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கி, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் சிறப்பாக பணியாற்றிய 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ரத்த தானம்

விழாவையொட்டி ஊர்க்காவல் படையை சேர்ந்த 200 பேர் ரத்த தானம் வழங்கினர். இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்லா, துணை சூப்பிரண்டு சுகுமாறன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுந்தரராஜூ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்