44 பேர் எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணியில் வர்க்க ஒற்றுமை தினம் அனுசரிப்பு ஜி.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோர் பங்கேற்பு
கீழ்வேளூர், 44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி கிராமத்தில் “வர்க்க ஒற்றுமை தினம்” அனுசரிக்கப்பட்டது. இதில் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கூலி உயர்வு
கீழ்வேளூர்,
44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி கிராமத்தில் “வர்க்க ஒற்றுமை தினம்” அனுசரிக்கப்பட்டது. இதில் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கூலி உயர்வு
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி கிராமம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு விவசாயம் உயிர் ஆதாரமாகும். இங்கு உள்ள நிலச்சுவான்தாரர்களின் விவசாய நிலங்களில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்கள் சுமார் 1 படி முதல் 2 படி வரையிலான நெல்களை ஊதியமாக பெற்று வந்தனர். போதிய ஊதியம் கிடைக்காததால் பல முறை கூலி உயர்வு கேட்டு விவசாயிகள் போராடி வந்தனர். இந்தநிலையில் கூலி உயர்வு கேட்டு போராடிய குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு எரித்துக்கொல்லப்பட்டனர். எரித்துக்கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 25-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் “வர்க்க ஒற்றுமை தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அஞ்சலி
நேற்று 48-வது ஆண்டு “வர்க்க ஒற்றுமை தினம்” கீழவெண்மணியில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டசெயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரய்யன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், மாரிமுத்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், லாசர், மாவட்டகுழு உறுப்பினர் நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மதிவாணன் எம்.எல்.ஏ. உட்பட திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து சி.ஐ.டி.யு, இந்திய மாணவர்சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய மாதர்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சியினர், பகுஜன் சமாஜி கட்சியினர் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.