இளம்பிள்ளை அருகே ஏரியில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
இளம்பிள்ளை அருகே கனககிரி ஊராட்சியில் காக்காபாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி
இளம்பிள்ளை,
இளம்பிள்ளை அருகே கனககிரி ஊராட்சியில் காக்காபாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.