கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் போலீசார் வேட்டை நீடிக்கிறது

சிவகாசி, சிவகாசி, திருத்தங்கலில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 146 இரு சக்கரவாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடவடிக்கை மாவட்டத்தின் பல்வேறு

Update: 2016-12-25 20:30 GMT
சிவகாசி,

சிவகாசி, திருத்தங்கலில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 146 இரு சக்கரவாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடவடிக்கை

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோவில் வளாகம், டாஸ்மாக் கடை பகுதிகள், வாகன காப்பகங்களில் கேட்பாரற்று மாதக்கணக்கில் இரு சக்கரவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்திட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி ஏராளமான இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். தற்போது சிவகாசியில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

111 வாகனங்கள்

சிவகாசி நகராட்சி வாகன காப்பகத்திற்கு வெளியே கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 52 இரு சக்கர வாகனங்களும் சிவகாசி ரெயில்வே வாகன காப்பகத்திலிருந்து 30 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான நாரணபுரம் பைபாஸ் ரோடு மற்றும் தனியார் தியேட்டர் அருகே உள்ள பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்தங்கல்

இதேபோல திருத்தங்கல் பகுதியில் 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை தேடிவருவோர் உரிய சான்றிதழை காண்பித்தால் அவர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு இருக்கிறார். வேட்டை நீடிக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்