சங்ககிரி அருகே நடந்து சென்ற அய்யப்ப பக்தர் லாரி மோதி பலி 4 பேர் படுகாயம்
சங்ககிரி அருகே நடந்து சென்ற அய்யப்ப பக்தர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அய்யப்ப பக்தர்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கொம்பைகாரபள்ளி பகுதியில் இருந்து கடந்த 17–ந் தேதி வெங்கடேஷ் (வயது 35), சிவகுமார் ரெ
சங்ககிரி,
சங்ககிரி அருகே நடந்து சென்ற அய்யப்ப பக்தர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அய்யப்ப பக்தர்கள்ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கொம்பைகாரபள்ளி பகுதியில் இருந்து கடந்த 17–ந் தேதி வெங்கடேஷ் (வயது 35), சிவகுமார் ரெட்டி (30), மல்லிகா அர்ஜூனா (35), நாகபூசன் ரெட்டி (45), கங்காதர் (32) என 5–க்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இதனிடையே சங்ககிரி அருகே வி.என்.பாளையம் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த மாதேஸ் (31) என்பவர் ஓட்டி வந்தார்.
சாவுஅப்போது சபரிமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ், சிவகுமார் ரெட்டி, மல்லிகா அர்ஜூனா, நாகபூசன் ரெட்டி, கங்காதர் ஆகியோர் மீது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சங்ககிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் காயமடைந்த சிவகுமார் ரெட்டி, மல்லிகா அர்ஜூனா, நாகபூசன் ரெட்டி, கங்காதர் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிரைவர் கைதுஇதைத்தொடர்ந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிவகுமார் ரெட்டி, மல்லிகா அர்ஜூனா, நாகபூசன் ரெட்டி, கங்காதர் ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக சங்ககிரி இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாதேசை கைது செய்தார். சபரிமலைக்கு நடந்து சென்ற அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.