கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த 7 மலைப்பாம்புகள் வனத்துறையினர் பிடித்தனர்

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த 7 மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து, நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர். மலைப்பாம்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3–ல் ஒரு பங்கு வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, கரடி, மல

Update: 2016-12-25 22:45 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த 7 மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து, நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3–ல் ஒரு பங்கு வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, கரடி, மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளன. அதில் கிருஷ்ணகிரியை சுற்றி உள்ள வனப்பகுதியில் அதிக அளவில் பாம்புகள் உள்ளன. இதில் மலைப்பாம்புகள் அடிக்கடி ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே சின்னமல்லப்பாடி, ஜிட்டோபனப்பள்ளி, கருவானூர், வரட்டனப்பள்ளி, பர்கூர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மலைப்பாம்புகள் வந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ஆசிஸ்குமார் ஸ்ரீ வத்சவா உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் அறிவுரைப்படி, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷ் தலைமையில் வனவர்கள் பார்த்தசாரதி, சம்பத்குமார், வன காப்பாளர்கள் கங்கை அமரன், கோவிந்தசாமி, பிரபு தயாளன், சிவக்குமார், கணபதி, ஆகியோர் அங்கு சென்று அந்த மலைப்பாம்புகளை பிடித்தனர்.

வனப்பகுதியில் விடப்பட்டன

இதே போல கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் அரியவகை உயிரினமான எறும்புதின்னி பிடிபட்டது. மேலும் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் அட்டகாசம் செய்து வந்த ஒரு குரங்கையும் வனத்துறையினர் பிடித்தனர். இதைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட 7 மலைப்பாம்புகள், எறும்புதின்னி மற்றும் குரங்கு ஆகியவை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விடப்பட்டன.

மேலும் செய்திகள்