புதுக்கோட்டை நகராட்சியை தூய்மை நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

புதுக்கோட்டை நகராட்சியை தூய்மை நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் வலியுறுத்தி உள்ளார். தூய்மை நகர மதிப்பீட்டு ஆய்வு இது குறித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப

Update: 2016-12-24 22:15 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியை தூய்மை நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் வலியுறுத்தி உள்ளார்.

தூய்மை நகர மதிப்பீட்டு ஆய்வு

இது குறித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகர மதிப்பீடு ஆய்வு வருகிற ஜனவரி 4–ம் தேதி முதல் புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை நகராட்சி உட்பட தேசிய அளவில் உள்ள 500 நகரங்களில் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இதையடுது இந்நகராட்சி முதன்மை நகர தேர்வு மதிப்ட்டை அடைய அனைத்து நடவடிக்கைகளும் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற நகர பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். அனைத்து வீடுகளிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க 40 சதவீதமும், திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்த்து கழிப்பறை பயன்படுத்தலுக்கு 30 சதவீதம் மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே அனைத்து வீடுகளிலும் குப்பையை தரம் பிரித்து கொடுக்கவும், நகராட்சியில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பொதுகழிப்பிடங்கள், சமுதாய கழிப்பிடங்களை பயன்படுத்தி திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து பொது சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். அதன் மூலம் புதுக்கோட்டை நகராட்சி அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நகராட்சியில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தூய்மை ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

ஒத்துழைக்க வேண்டும்

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை பயன்படுத்தி குடிநீர், குப்பை, கழிவறை, தெரு விளக்குகள் தொடர்பான குறைகளை பதிவு செய்யலாம். நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, புதுக்கோட்டை நகராட்சியை முதன்மை நகரமாக தேர்வு மதிப்பீட்டினை அடைய நகர பொதுமக்கள் நகரின் தூய்மையை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும். புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டிட இடிபாடுகள்

நகர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் கட்டிட இடிபாடுகள் பெருமளவில் உள்ளது. அவ்வாறு கட்டிட இடிபாடுகள் வைத்திருப்பவர்கள் திருக்கட்டளை ரோட்டில் அமைந்து உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் கீழ்புறத்தில் தனியார் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள இடத்தில் கொண்டு சென்று இடிபாடு கழிவுகளை கொட்ட வேண்டும். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டிடப்பணி நடைபெறும் இடங்களில் உள்ள கட்டிட கழிவுகள் மற்றும் கட்டுமான இடிபாடுகள் போன்றவற்றை அவ்வப்பொழுது அப்புறப்படுத்தி நகரின் தூய்மையாக வைத்து கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்