கரூரில் பெண்களிடம் தங்க நகைகள் பறித்த 2 வாலிபர்கள் கைது ரூ.6½ லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

கரூரில் பெண்களிடம் தங்க நகைகள் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். திருட்டு கரூரில் பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை பறித்து செல்லும் சம்பவ

Update: 2016-12-24 22:00 GMT

கரூர்,

கரூரில் பெண்களிடம் தங்க நகைகள் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருட்டு

கரூரில் பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் சமீப காலமாக நடந்து வந்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். அவர்கள், பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கரூரில் சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

பறிமுதல்

அவர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மதுரை மாவட்டம் நாகமலை சின்னக்கன்நகரை சேர்ந்த சிவா என்கிற சத்தியகுமார்(வயது23) என்றும், மற்றொருவர் கரூரை சேர்ந்த ராமர்(25) என்றும் கூறினர். மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கரூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், வெள்ளியணை, லாலாப்பேட்டை, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் பெண்களிடம் தங்க நகைகள் பறித்ததையும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான 32 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்