தொப்பூர் அருகே ரெயிலை கவிழ்க்க சதி: கிராமங்களில் வீடு, வீடாக போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததையொட்டி போலீசார் கிராமங்களில் வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். ரெயிலை கவிழ்க்க சதி திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயிலை ஜ

Update: 2016-12-24 22:45 GMT

ஓமலூர்,

ஓமலூர் அருகே ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததையொட்டி போலீசார் கிராமங்களில் வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ரெயிலை கவிழ்க்க சதி

திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயிலை ஜார்ஜ் என்பவர் ஓட்டிவந்தார். இந்த ரெயில் சேலம்–தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வனபகுதியில் செல்லும்போது ரெயில் தண்டவாளத்தில் இருந்து திடீர் என சத்தம் வந்ததது. இதனை அடுத்து ரெயிலை நிறுத்திவிட்டு பார்த்தபோது தண்டவாளத்தில் 10 கான்கிரீட் சிலாப்புகள் வைக்கப்பட்டு இருந்ததும், அதில் 3 சிலாப்புகள் உடைந்து நொறுங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ரெயில் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சேலம் சரக டி.ஐ.ஜி நாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ரெயிலை கவிழ்க்க சதி செய்யும் வகையில் தண்டவாளத்தில் சிமெண்டு சிலாப்புகள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

வீடு, வீடாக விசாரணை

இந்தநிலையில் நேற்று ஓமலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், சுரேஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிபடை போலீசார் 20–க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தொப்பூர், செக்காரப்பட்டி, ராமமூர்த்தி நகர், குண்டுக்கல், ஜோடுகுளி, பையூரான்கொட்டாய் போன்ற கிராமங்களில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க வந்து செல்வோர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அன்று இரவு வந்த செல்போன் அழைப்புகள் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்