திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தேர்வு வேலூரில் நாளை முதல் 31–ந் தேதி வரை நடக்கிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தேர்வு நாளை முதல் வருகிற 31–ந் தேதி வரை வேலூரில் நடக்கிறது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதா

Update: 2016-12-24 21:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தேர்வு நாளை முதல் வருகிற 31–ந் தேதி வரை வேலூரில் நடக்கிறது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

நேர்காணல் தேர்வு

கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு வேலூர் கோட்டை அருகேயுள்ள நேதாஜி கலையரங்கில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரையும் நடைபெற உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முக அழைப்பாணை

நேர்முக அழைப்பாணை கிடைக்க பெறாதவர்கள் அழைப்பாணையை www.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முக அழைப்பாணைகளை அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்