தட்டம்மை, ரூபெல்லா நோய் தடுப்பு இயக்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பயிற்சி முகாம்
வேலூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 6–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் 9 மாதம் முடிந்த 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. வேலூர் மாவட்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 6–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் 9 மாதம் முடிந்த 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5.5 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசி முனைப்பு இயக்கத்தின் சார்பாக நடந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 47 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் செந்தாமரை, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் சங்கரானந்தி, உதவி திட்ட மேலாளர் ராஜேஷ், மாநகர நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.