திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் அதிகாரிகள் உத்தரவு
பணியில் கவனக்குறைவாக இருந்ததாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 276 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இந்த டாஸ்மாக்கடைகள் வேலூர்
வேலூர்,
பணியில் கவனக்குறைவாக இருந்ததாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வுவேலூர் மாவட்டத்தில் மொத்தம் 276 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இந்த டாஸ்மாக்கடைகள் வேலூர் மற்றும் அரக்கோணம் என 2 மாவட்ட நிர்வாகங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களின் விற்பனை, பதிவேடு, வரவு– செலவு ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில சமயங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ரகசியமாக சென்று அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் ரூ.19 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது.
3 பேர் பணியிடை நீக்கம்இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பிரசாத், விற்பனையாளர் பலராமன், உதவி விற்பனையாளர் மோகன் ஆகியோர் பணியில் கவன குறைவாக இருந்ததாக அவர்களை டாஸ்மாக் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.