சொரக்காப்பட்டி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏரிக்காடு அருகே சொரக்காப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் முகப்பு பகுதியில் 10–க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்தனர். இந்தநிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் கடந்த

Update: 2016-12-24 23:00 GMT

கொளத்தூர்,

கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏரிக்காடு அருகே சொரக்காப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் முகப்பு பகுதியில் 10–க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்தனர். இந்தநிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று மேட்டூர் துணை தாசில்தார் வாசுகி முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்