தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி சாலையின் மறுபக்கம் தூக்கி வீசப்பட்டவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விழுந்தார்
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையின் மறுபக்கம் தூக்கிவீசப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர், எதிர்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளி ஆசிரியர் மீது விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையின் மறுபக்கம் தூக்கிவீசப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர், எதிர்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளி ஆசிரியர் மீது விழுந்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் குபேர நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 35). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், போபாலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்து இருந்த விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மடிப்பாக்கம் திரும்பிக் கொண்டு இருந்தார். விஜயநகர் வேளச்சேரி மெயின் ரோட்டில் அவர் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
தூக்கிவீசப்பட்டு பலி
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் மறுபக்கம் தூக்கிவீசப்பட்ட விக்னேஷ், எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ரகுபதிராஜா(40) என்பவர் மீது விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். ஆசிரியர் ரகுபதிராஜா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மகன் கண்முன் தந்தை பலி
சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பெரியபனிச்சேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய சொந்த ஊர் கோவை. இவருடைய தந்தை விஸ்வநாதன்(58) ரெயில்வே ஊழியர். இவர், தனது மகனை பார்க்க கோவையில் இருந்து ரெயிலில் சென்னை சென்டிரல் வந்தார்.அங்கிருந்து மின்சார ரெயிலில் கிண்டி வந்த தந்தையை செந்தில்குமார் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது பக்கவாட்டில் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த விஸ்வநாதன் மீது லாரி சக்கரம் ஏறியது. மகன் கண் எதிரிலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த 2 விபத்துகள் குறித்தும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.