எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களுக்கு நிதியுதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி நிதியுதவி வழங்கினார். எய்ட்ஸ் நோயாளிகள் புதுச்சேரியில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நேராமல் பாதித்துள்ள அனைவருக்கும் அவர்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பாண்டி
புதுச்சேரி,
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி நிதியுதவி வழங்கினார்.
எய்ட்ஸ் நோயாளிகள்புதுச்சேரியில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நேராமல் பாதித்துள்ள அனைவருக்கும் அவர்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலமாக எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலமாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் முதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கு ரூ.1,500–ம், 60 வயது முதல் 70 வயதுவரை உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அமைச்சர் கந்தசாமிஇந்த நிதியுதவியை அமைச்சர் கந்தசாமி சுகாதாரத்துறை இயக்குனர் ராமனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் ஜெயந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் மீனாகுமாரி, துணை இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் மூலம் புதுச்சேரி பகுதியில் 288 பயனாளிகளும், காரைக்காலில் 79 பேரும், மாகி பகுதியில் ஒருவரும், ஏனாமில் 21 பேரும் பயனடைகிறார்கள்.