புழல் சிறையில் 10 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்
சென்னையை அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 54). இவர், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம்
செங்குன்றம்,
சென்னையை அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 54). இவர், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அம்பத்தூரில் உள்ள அவரது அலுவலகம் அருகே மர்மநபர்களால் சுரேஷ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அபுதாகீர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் விசாரணை சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர்கள் 10 பேரும் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை உயர்மட்ட பாதுகாப்பு அறையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும். தங்களை உறவினர்கள் பார்க்க விதிக்கப்பட்டு உள்ள தடையை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளிடம் சிறை சூப்பிரண்டு குமரேசன்(பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் ஏற்கனவே உண்ணா விரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.