தூத்தூர் கிராமத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காடப்பன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தின் வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு ஒரு மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பொன்னமராவதி தீயணைப்பு
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காடப்பன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தின் வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு ஒரு மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் இருந்ததாக தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்தனர்.