9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 27–ந்தேதி ஆர்ப்பாட்டம் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வருகிற 27–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார் வெளியி
கோட்டூர்,
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வருகிற 27–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
27–ந்தேதி ஆர்ப்பாட்டம்திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் கோட்டூர் ஒன்றிய ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை போக்கி அரசு உத்தரவுப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். மாவட்ட தலைவர் சாந்தகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காந்தி, ஓ.எச்.டி.சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் நேரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசுகிறார்கள். இதில் மாவட்டத்தில் இருந்து ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.