நெல்லையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றம் நெல்லையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி அதை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்

Update: 2016-12-23 21:00 GMT

நெல்லை,

நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெல்லையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி அதை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்புராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நெல்லை டவுன் தெற்கு மவுண்ட்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அங்கிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள்.

அந்த ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடைகளை இடித்து அகற்றினார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு சாலைகுமாரசாமி கோவில் அருகில் உள்ள பாளையஞ்சாலை பகுதியில் பல கடைகளின் முன்பு கூரைகள், ஆஸ்பெட்டா சீட் அமைத்து ஆக்கிரமித்து அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் பூக்கடைகள், பழக்கடைகள என பல கடைகள் வைத்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளும் நேற்று அகற்றப்பட்டன.

பாரபட்சம்...

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுத்து அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது“ என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்