டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின்படி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பாடத்துடன் நற்பண்புகளை இணைத்து கற்
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின்படி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பாடத்துடன் நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் பயிற்சி நடந்தது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
திருச்செந்தூர், உடன்குடி ஒன்றியத்தை சார்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட இப்பயிற்சிக்கு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி தலைமை தாங்கினார். நிறுவன ஆங்கில விரிவுரையாளர் உஷா வரவேற்றார். வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சமூகவியல் விரிவுரையாளர் பாரதிராஜன், குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்சாமி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முகம்மது மசூத் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வியியல் விரிவுரையாளர் மல்லிகா, பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
காணொலி காட்சி
9, 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாடத்தில் இருந்து பாடவரிகளை தேர்ந்தெடுத்து அந்த பாட வரிகளில் காணப்பட்ட நற்பண்புகளை மாணவர்களுக்கு உண்மை சம்பவங்கள், கதைகள் மூலமாக விளக்குவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மொத்தம் 40 பண்புகள், அவற்றுள் 9-ம் வகுப்புக்கு 20 பண்புகளையும், 10-ம் வகுப்புக்கு 20 பண்புகளையும் உள்ளடக்கி கதைகள் கூறியும், காணொலி காட்சியின் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு பாடத்துடன் இணைந்து நற்பண்புகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் எடுத்துக்கூற வேண்டும். இதன் வாயிலாக மாணவர்களிடம் நல்ல பழக்கவழக்கங்கள் வளரும் என்றும் இப்பயிற்சியின் வாயிலாக ஆசிரியர்களுக்கு உணர்த்தப்பட்டது.